அரைப்பரிட்சை லீவை கணக்கு பண்ணி டிச.21ல் வரப்போகும் படங்களின் லிஸ்டு தெரியுமா?

VM| Last Modified வெள்ளி, 7 டிசம்பர் 2018 (12:49 IST)
தற்போது அரையாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடக்க உள்ளது. வரும் டிசம்பர் 21ம் தேதிக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கிறிஸ்துமஸ் விடுமுறையும் வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஏராளமான படங்கள் வெளியாக உள்ளது. 


 
தனுசின் மாரி, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கானா, ஜிரோ, கேஎப்ஜே, ஒடியன்,அக்வாமன், உள்ளிட்ட படங்கள் டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டிசம்பர் 20ம் தேதியே விஜய் சேதுபதியின் சீதக்காதி வெளியாகிறது. 
 
ஆனால் டிசம்பர் 14ம் தேதி யாரும் படத்தை திரைக்கு கொண்டுவர ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அரையாண்டு தேர்வு சமயம் என்பதால் யாரும் திரையரங்குக்கு செல்ல மாட்டார்கள் என்பது தயாரிப்பாளர்களின் கணிப்பு. அதனால் படத்தை டிச 21ம் தேதி வெளியிட்டு விடுமுறையில் காசு பார்க்கலாம் என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
இதற்கிடையே தயாரிப்பாளர் சங்கம்,  இந்த விவகாரம் தொடர்பாக போட்ட மீட்டிங்கில், பெரிய தயாரிப்பாளர்கள் படங்கள் மட்டுமல்ல, எங்க படமும் விடுமுறை நாளில் வெளியானால் தான் நாங்களும் போட்ட பணத்தை எடுக்க முடியும் என கறாராக சொல்லிவிட்டார்கள். இதனால் படம் வெளியீடு என்பது தயாரிப்பாளர்கள் கையில். ஆனால் திரையரங்குகள் கிடைப்பது என்பது பெரிய விநியோகிஸ்தர்கள் கையில் என்பதால் சிறுபட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது சவாலாகத்தான் இருக்கும். 


இதில் மேலும் படிக்கவும் :