டெல்லியில் என்கவுண்டர்: இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு
போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் மற்றும் போலீசாரிடம் பிடிபட்ட குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்படுவது நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே
சமீபத்தில் கூட ஐதராபாத் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதும் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒரே போராட்ட களமாக இருக்கும் டெல்லியில் இன்று அதிகாலை என்கவுண்டரில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
பல்வேறு வழக்குகளில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வந்த ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய 2 பேர் இன்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரகலாதபூர் என்ற பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற என்கவுண்டர் சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், இது குறித்து மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த என்கவுண்டர் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது