திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 26 பிப்ரவரி 2020 (12:52 IST)

வன்முறைக்கு காரணம் போலீஸ்தான்! – உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லியில் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு போலீஸின் மெத்தன போக்கே காரணம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடைபெற்ற கலவரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் போலீஸாரின் மெத்தன போக்கால்தான் இந்த கலவரம் வெடித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். சிஏஏ ஆதரவு பேரணி மற்றும் எதிர்ப்பு பேரணி இரண்டும் அருகருகே நடத்த அனுமதித்தது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ள உச்சநீதிமன்றம் நிலைமை கைமீறி செல்லும் அளவுக்கு ஏன் விட்டீர்கள் என மத்திய அரசிடமும் கேள்வியெழுப்பியுள்ளது.