எப்பவெல்லாம் சென்னை வறேனோ.. அப்போ எல்லாம்..? – பிரதமர் மோடி ட்வீட்!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில் அதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். சென்னை வந்தடைந்த அவருக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்பு அளித்து மரியாதை செய்தனர்.
பின்னர் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த பிரதமர், பிறகு விவேகானந்தர் இல்லத்தை பார்வையிட்டு, அல்ஸ்டோம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பேசினார்.
தனது சென்னை பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “நான் எப்போதெல்லாம் இந்த சிறந்த நகரத்திற்கு வருகிறேனோ அப்போது எல்லாம் உற்சாகமடைகிறேன். சென்னை மக்கள் என் மீது கொண்டுள்ள அன்புக்கு நான் என்றும் நன்றியுள்ளவன்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K