வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (10:40 IST)

திருவள்ளுவர் தினம்: தமிழில் டுவீட் செய்து பிரதமர் வாழ்த்து!

இன்று திருவள்ளுவர் தினம் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட்டப்பட்டு வருகிறது என்பதும் அரசியல் தலைவர்கள் திரை உலக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
அதுமட்டுமின்றி திருவள்ளுவர் குறித்து பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருவதால் திருவள்ளுவர் குறித்த ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழர் பண்டிகையின் போதெல்லாம் தமிழில் டுவிட் செய்து தமிழர்களை உற்சாகப்படுத்தி வரும் பிரதமர் மோடி, திருவள்ளுவர் தினமான இன்று தமிழில் இரண்டு டுவிட்டுகளை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டுகளில் அவர் கூறியிருப்பதாவது:
 
போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.
 
அவரது லட்சியங்கள்  தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
 
அதேபோல பிரதமர் மோடி ஆங்கிலத்திலும் திருவள்ளுவர் குறித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது