செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (16:42 IST)

பிரமர் மோடி மணிப்பூருக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேச வேண்டும் - ராகுல் காந்தி

rahul gandhi
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்று வரும் நிலையில், மணிப்பூரில் விவகாரத்தில்  மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இதன் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கிய   நிலையில்,  நேற்று  காங்கிரஸ் உள்ளிட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி  உரையாற்றினார்.

அதில்,  ‘’எங்கள் மீது நம்பிக்கை வைத்த  மக்களுக்கு  நன்றி! நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு எதிரானது அல்ல. எதிர்க்கட்சிகளுக்கானது’’   என்று தெரிவித்திருந்தார்.

இந்த  நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் பேசிய எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும். மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்றுதான் பிரதமர் மோடி நினைக்கிறார். அதை சரி செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை என்று கூறினார்.

மேலும், ''பாரத மாதா என்று நான் பேசிய வார்த்தைகள்  நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் நடந்து வருவதை இந்திய ராணுவத்தால் 2 நாட்களில்    நிறுத்த முடியும். பிரமர் மோடி மணிப்பூருக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் பேச வேண்டும்'' என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.