திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மே 2024 (14:55 IST)

இந்தியா கூட்டணிக்கு போடும் ஓட்டு எல்லாமே வேஸ்ட்: பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்!

Modi
இந்தியா கூட்டணிக்கு போடும் வாக்குகள் எல்லாமே வேஸ்ட் என பிகார் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசி உள்ளார் 
 
நாடு முழுவதும் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பீகாரின் தற்போது பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் 
 
பிகார் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று 5 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பீகாரில் உள்ள மற்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி மிகவும் ஆவேசமாக பேசினார் 
 
பிகாரை முன்னோக்கி கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சிக்கு விருப்பமில்லை என்றும் உங்கள் குழந்தைகளை பற்றி அவர் கவலைப்படுவதில்லை என்றும் அவர்களுடைய வாரிசுகளை மட்டுமே கவலைப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார் 
 
பிகார் மாநில மக்கள் யாராவது இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க பட்டனை அழுத்தினால் அந்த வாக்கு வீணாகப் போவது உறுதி என்றும் பீகார் மக்கள் புத்திசாலிகள், எனவே வலுவான ஆட்சி அமைக்க அவர்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் வளமான நாட்டை கட்டமைக்க உங்கள் வாக்குகளை பாஜக கூட்டணிக்கு அளியுங்கள் என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார்
 
Edited by Mahendran