ஞாயிறு, 2 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 11 மே 2024 (16:37 IST)

மோடியை எதிர்த்து போட்டியிட முயன்ற 111 தமிழக விவசாயிகள்..ரயிலை ரத்து செய்த ரயில்வே துறை..!

Train
பிரதமர் மோடியை எதிர்த்து 111  தமிழக விவசாயிகள் போட்டியிட இருந்த நிலையில் அவர்கள்   முன்பதிவு செய்த ரயில் ரத்து செய்யப்பட்டதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் நேற்று ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவர்கள் செல்ல இருந்த ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தது

இதனை அடுத்து விவசாயிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயி தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ரயில் மறியல் போராட்டம் செய்தனர் என்பதும் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டு அபாய சங்கலியை பிடித்து இழுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

 இதனை அடுத்து ரயில்வே துறை அதிகாரிகள்,  காவல்துறையினர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ரயில் ரத்து செய்யப்பட்டது குறித்து அவர்கள் விளக்கம் அளித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது

Edited by Siva