வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (16:25 IST)

CAA சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது.! பிரதமர் மோடியின் 5 உத்தரவாதம்.!!

PM Modi
குடியுரிமை திருத்தச்சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
 
மேற்குவங்க மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், மேற்குவங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு திரிணமுல் காங்கிரஸ் அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார். மேற்கு வங்க மாநிலத்தில் மோசடிகள் அதிகம் நடைபெறுவதாகவும், மாநில அரசின் பாதுகாப்பில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் செழித்து வருகின்றனர் எனவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
 
கடந்த தேர்தலை விட தற்போது நடைபெற்ற வரும் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேற்குவங்க அரசு ராமநவமியை கொண்டாட மக்களை அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு ஐந்து உத்தரவாதங்களை அளித்துள்ளார். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க விட மாட்டேன் என்றும் எஸ்.சி, எஸ்.டி, மற்றும் ஓபிசி இட ஓதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

 
ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை யாராலும் ரத்து செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார். ராமரை வணங்குவதையும், ராம நவமியைக் கொண்டாடுவதையும் யாராலும் தடுக்க முடியாது என்றும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.