செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 4 மார்ச் 2024 (08:44 IST)

பாஜகவுக்கு பிரதமர் மோடி கொடுத்த தேர்தல் நிதி.. எவ்வளவு தெரியுமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்

modi amithsha
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதி வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் நிதியாக பிரதமர் மோடி 2000 ரூபாய் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகள் நன்கொடை வசூல் செய்யும் என்பதும் அந்த பணத்தை வைத்து தான் தேர்தல் செலவு செய்யும் என்பது தெரிந்தது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி நன்கொடையை தொடங்கியுள்ள நிலையில் அதற்காக நமோ என்ற செயலியை உருவாக்கி அதன் மூலம் நன்கொடை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த செயலியில் பிரதமர் மோடி முதல் நபராக 2000 ரூபாய் பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் ’பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பங்களிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், எங்கள் முயற்சியை வலுப்படுத்துவதற்காக நமோ செயலி மூலம் தேசத்தை கட்டி எழுப்புவதற்காக 2000 ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளேன் என்றும் அனைவரும் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் பிரதமர் தனது கட்சிக்கு வெறும் 2000 ரூபாய் மட்டும் நன்கொடை அளித்ததை நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Edited by Siva