ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கொரோனா பாதிப்பு தொடர்பாக 8 மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக ஆலோசனை செய்ய உள்ளார். அசாம், நாகலாந்து, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையின் போது எட்டு மாநில முதல்வர்களுக்கு கொரோனா பாதிப்பு, தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய முறைகள் குறித்து பிர்தமர் அறிவுறுத்துவார் என்று கூறப்படுகிறது 
 
தென் கிழக்கு மாநிலங்களான இந்த எட்டு மாநிலங்களில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து கொரோனா இல்லாத மாநிலங்களாக அவைகளை மாற்ற வேண்டும் என்பதை மத்திய அரசின் குறிக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது