கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி !
கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் மொத்தமுள்ள 70 இடங்களில் 63 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது ஆம் ஆத்மி. இந்நிலையில் முதல்வராக பதவியேற்கவுள்ள கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாஜக 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தை கூட இதுவரை கைப்பற்றவில்லை. தற்போதைய நிலவரப்படி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் பின்னடைவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மோடி அரவிந் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், ஆம் ஆத்மி கட்சிக்கும் ஸ்ரீ அரவிந் கெஜ்ரிவாலுக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள். டெல்லி மக்களின் ஆசைகளை நிறைவேற்ற வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.