1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (09:41 IST)

என் தீபாவளி அவங்களோடதான்.. வழக்கம்போல ராணுவ முகாம் சென்ற பிரதமர் மோடி!

நேற்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிக்கை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் தீபாவளி கொண்டாடினர். ஆண்டுதோறும் தீபாவளியை நாட்டு எல்லையில் காவல் பணியில் உள்ள ராணுவ வீரர்களோடு கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தீபாவளிக்கும் அவ்வாறே ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷேராவில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். முதலில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழக்கினார்.