வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (09:40 IST)

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - பினராயி அறிவிப்பு!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

 
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் தினமும் கொரோனாவால் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 
 
மேலும்,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசே ஏற்கும். குழந்தைகளுக்கு 18 வயதாகும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
 
இதற்கு முன்னதாக தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஆந்திர அரசு சார்பில் ரூ.10 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.