புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 22 பிப்ரவரி 2021 (06:51 IST)

பெட்ரோல் விலை பெரிதாக உயரவில்லை: முதல்வர் சர்ச்சை கருத்து!

பெட்ரோல் விலை பெரிதாக உயரவில்லை என்றும் கச்சா எண்ணெயின் உயர்வை விட குறைவாகத்தான் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும் ஹரியானா மாநில முதல்வர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தாலும் மத்திய மாநில அரசுகளின் வரிகள் காரணமாக தான் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தாண்டியுள்ள பெட்ரோலின் விலை விரைவில் தமிழகத்திலும் ரூ.100ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஹரியானா முதல்வர்  லால் கட்டர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பெட்ரோல் விலை அவ்வளவாக உயரவில்லை என்றும் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் எரிபொருள் விலை 10 முதல் 15 சதவீதம் அதிகரித்து உள்ளதால் அதை ஒப்பிடும்போது பெட்ரோல் விலை உயர்வு குறைவுதான் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
மேலும் பெட்ரோல் மீதான அதிக வரி அதிகம் வசூலிக்கப்படுகிறது குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில் ’வரிகள் அனைத்தும் மீண்டும் மக்களுக்காகவே செலவு செய்யப்படுகிறது என்றும் அதனால் மக்கள் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்