புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (13:31 IST)

ப்ரக்யா தாகூர் ஒரு தீவிரவாதி! – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

மக்களவையில் நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பாஜக ப்ரக்யா தாகூர் பேசியதற்கு
கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

நேற்று நாடாளுமன்றத்தில் காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை பாஜக எம்.பி பிரக்யா தாகூர் ’தேசபக்தர்’ என குறிப்பிட்டு பேசினார். இதற்கு உடனடியாக பாராளுமன்றத்திலேயே கடும் அமளி ஏற்பட்டது. அதனால் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனை குழுவிலிருந்து பிரக்யாவை நீக்கியது பாஜக.

நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி ”தீவிரவாதி பிரக்யா தீவிரவாதி கோட்சேவை “தேசபக்தர்” என்று அழைக்கிறார். இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே இது ஒரு சோகமான நாள்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ப்ரக்யா தாகூரை தீவிரவாதி என குறிப்பிட்டு ட்விட்டரில் Terrorist என்ற ஹேஷ்டேகை பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் கோட்சே குறித்த ஹேஷ்டேகுகளும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.