செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (16:51 IST)

ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

parliament
ஜூலை 18-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது 
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது 
 
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது/ நாடாளுமன்றத்தின் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரண்டும் சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் அக்னிபாத் உள்பட பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது