திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (11:45 IST)

12 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: திங்கள் வரை நாடாளுமன்ற ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த தொடரின் போது அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனையடுத்து 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை அமளி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை அடுத்த திங்கட்கிழமை காலை 11 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.