திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (15:28 IST)

படப்பிடிப்பே தொடங்கல.. ஆனா ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு! – பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் அப்டேட்!

பிரபல ஹாலிவுட் படமான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரிடஸின் பத்தாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட்டில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் பல ரசிகர்களை பெற்ற திரைப்படங்களில் ’ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ திரைப்பட வரிசை முக்கியமான ஒன்று. முதல் மூன்று பாகம் வரை ஹாலிவுட்டில் மட்டுமே வெற்றிப்பெற்றிருந்த இந்த படவரிசை நான்காவது பாகம் முதல் உலகமெங்கும் ரசிகர்களை ஈர்க்க தொடங்கியது.

இதுவரை ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்” கதை வரிசையில் மொத்தம் 9 பாகங்கள் வெளிவந்துள்ளன. இதுதவிர ஹாப்ஸ் அண்ட் ஷா என்ற தனிப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது. அதிவேக ரேஸ் கார்களை கொண்டு வின் டீசல் செய்யும் ஆக்‌ஷன் காட்சிகள் உலகளவில் பிரசித்தம். 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 10வது பாகம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் பட ரிலீஸை 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு திட்டமிட்டிருந்தார்கள். அதை தற்போது 2023ம் ஆண்டு மே மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.