இருவர் மீது பாஜக நவடிக்கை: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து
சர்வதேச அரங்கில் எதிர்ப்பு எழுந்ததால் தான் இருவர் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது என முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்
இந்தியாவில் எழுந்த எதிர்ப்புகளுக்கு பாஜக செவிசாய்க்கவில்லை என்றும் சர்வதேச அரங்கில் எதிர்ப்பு எழுந்ததால் தான் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் மீது பாஜக நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்
இஸ்லாமிய விரோத கருத்தை முதலில் விதைத்தவர் நுபுர் சர்மாவோ, நவீன் ஜிண்டாலோ இல்லை என்றும் தங்கள் எஜமானர்களை விட இருவரும் கூடுதல் விசுவாசத்தை காட்ட முயன்றுள்ளனர் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி உள்நாட்டில் பிளவுபட்ட இந்தியா தற்போது வெளிநாட்டிலும் பலவீனமாகிறது என்றும் பாஜகவின் வெட்கக்கேடான மதவெறி நம்மை தனிமைப்படுத்தியது மட்டுமின்றி உலக அளவில் இந்தியாவின் நிலையை கெடுத்து விட்டது என்றும் கூறியுள்ளார்