ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2019 (11:53 IST)

ப சிதம்பரத்திற்கு மேலும் பின்னடைவு... கைது செய்யுமா அமலாக்கத்துறை??

ஐ என் எகஸ் மீடியா முறைகேட்டில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் ,ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையினர் இது குறித்து தொடர்ந்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து ப சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் படி ஐ என் எக்ஸ் மீடியா வழக்குகள் சரியான பாதையில் செல்வதால் ப சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது எனவும், மேலும் விசாரணைகளுக்கு ப சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதனால் ப சிதம்பரம் அமலாக்கத்துறையால் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.