வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2019 (16:22 IST)

வெறும் 2 ரூபாய்க்காக ஒருவர் கத்தியால் குத்திக் கொலை !

இந்த உலகில் பணத்தின் தேவையை குறைத்து மதிப்பிட முடியாது. ஆயினும் அந்தப் பணத்துக்காக கொலை,கொள்ள சம்பவம் நடந்து வருகிறதை அன்றாடம் படித்து கேட்டு வருகிறோம். இந்நிலையில், இரண்டு ரூபாய்க்காக ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம்  கோதாவரி மாவட்டம் காக்கிநாடா என்ற பகுதியில், ஒரு நபர் சைக்கிள் நடத்தி வருகிறார்.  இந்நிலையில் அவது கடைக்கு வந்த வாடிக்கையாளர் தனது சைக்கிளுக்கு காற்று நிரப்பிவிட்டு, அதற்கு இரண்டு ரூபாய் தர மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
 
அதனால் இவ்விருவருக்கும், சண்டை நடந்துள்ளது.  இதில்,ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், சைக்கிள் கடை ஓனரை தாக்கியதாகத் தெரிகிறது.
 
அப்போது, சைக்கிள் கடை ஓனரின்,  நண்பர் உதவிக்கு வர, வாடிக்கையாளரை கத்தியால் குத்திக் கொன்றார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார்,சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்த இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.