திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (13:42 IST)

வெங்கடாசலபதிக்கு விஐபி ஆகனுமா?? 10 ஆயிரம் நன்கொடை கொடுங்க..

திருப்பதியில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.

திருப்பதியில் விஐபி தரிசனம் பெற எம்.எல்.ஏ. காவல் துறையினரின் அனுமதி கடிதம், ஆகியவை தேவை. மேலும் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். இதை தொடர்ந்து தரகர்கள் விஐபி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தற்போது ஆலய மேம்பாட்டிற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்குவோருக்கு விஐபி தரிசனம் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் இத்துடன் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.