ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (15:53 IST)

சினிமா ஆசை காட்டி உல்லாசம் கொண்ட சுமன்: இளம்பெண்கள் பகீர் புகார்

நெல்லூரை சேர்ந்த சூரி, சுமன் இளம் பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை அதிர வைத்துள்ளது. 
 
ஆந்திரா மாவட்டம் நெல்லூரை சேர்ந்த ஷேக் சூரி மற்றும் சுமன் ஸ்மார்ட் கன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து சில குறும்படங்களை இயக்கியுள்ளனர். இதை வைத்துக்கொண்டு படம் இயக்குவதாக சில இளம்பெண்களை ஏமாற்றியுள்ளனர். 
 
இதை நம்பிய இளம்பெண்களுக்கு சினிமா ஆசை காட்டி அவ்வப்போது உல்லாசம் அனுபவித்துள்லனர். இதை ரகசிய கேமராக்கள் மூலம் படம் பிடித்து வைத்துக்கொண்டு அந்த பெண்களை மிரட்டி வேறு பலருடன் உல்லாசமாக இருக்க அனுபிவைத்துள்ளனர். 
 
இதோடு நிறுத்தாமல் அந்த வீடியோக்களை வைத்து, சில தரகர்களைத் தயார் செய்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் போலீஸார் மொத்தம் 20 பேரை கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுப்படுத்தபப்ட்டிருந்த பெண்களையும் மீட்டு குடும்பத்தினருடன் அனுப்பிவைத்தனர்.