1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (13:59 IST)

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: மொத்த பாதிப்பு 5ஆக உயர்வு!

Monkey Pox
கேரளாவில் ஏற்கனவே நான்கு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது 
 
இந்தியா உட்பட பல நாடுகளில் தற்போது குரங்கு அம்மை நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் கேரளாவில் 4 பேர் ஆந்திராவில் ஒருவர் டெல்லியில் 3 பேர் என இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
இந்த நிலையில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 30 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
இதனை அடுத்து கேரளாவில் இதுவரை குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதால் அம்மாநில மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது