ஒலிம்பிக்கில் ஜோதி ஏந்தியா வீராங்கனை ரூ.200க்கு கூலி வேலை செய்வதாக தகவல்!
ஒலிம்பிக்கில் ஜோதி ஏந்தியா வீராங்கனை ரூ.200க்கு கூலி வேலை செய்வதாக தகவல்!
கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு ஜோதி இந்திய வீராங்கனை ஒருவர் தற்போது 200 ரூபாய்க்கு கூலி வேலை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி அவர் அசாம் வீராங்கனை பிங்கி. இவர் தற்போது தேயிலை தோட்டத்தில் 200 ஆக கூலிவேலை செய்து வருவதாக கூறப்படுகிறது
இந்திய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் அரசு தனக்கு உதவி செய்யவில்லை என்றும் லண்டன் ஒலிம்பிக்கில் ஜோதி ஏந்தி அளவுக்கு இந்தியாவை பெருமைப்படுத்திய தான் தற்போது கூலி வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் வீராங்கனைகளை அரசு ஊக்குவித்து அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பிங்கி மாதிரி தான் கூலி வேலை செய்யும் நிலை ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்