திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:30 IST)

உங்களால் நாடே பெருமை கொள்கிறது… ஒலிம்பிக் வீரர்களுக்கு கோலி வாழ்த்து!

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட இந்திய வீரர்களுக்கு இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.இதனை அடுத்து இறுதி நிகழ்ச்சி சற்று முன் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ‘பதக்கம் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி, தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி. நாட்டிற்காக உங்களுடைய பங்களிப்பை எந்த அளவிற்கு கொடுத்தோம் என்பதே பெருமை. உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம். ஜெய் ஹிந்த்’ எனக் கூறியுள்ளார்.