செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (17:53 IST)

ஓலா, உபர் ஆட்டோக்களுக்கு திடீர் தடை: போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு

Uber
ஓலா, உபர் ஆட்டோக்களுக்கு  தடை விதிக்கப்படுவதாக கர்நாடக மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 ஓலா, உபர் ஆட்டோக்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்ததையடுத்து இதுகுறித்து கர்நாடக மாநில அரசு விசாரணை செய்ய உத்தரவிட்டது 
 
இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள ஓலா, உபர், ராப்பிட்டோ ஆகிய ஆட்டோக்களில் கட்டணம் குறித்து விசாரித்தபோது அதிக கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது
 
இதனை  ஓலா, உபர், ராப்பிட்டோ ஆகிய  ஆட்டோக்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டதாக கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது 
 
தமிழகத்தில்  ஓலா, உபர் ஆகிய ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும் தமிழக அரசும் அதே போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.