1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (15:35 IST)

இந்து அல்லாதவர்கள் நுழையக்கூடாது.. கிராமத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு..!

இந்து அல்லாதவர்கள் நுழைய கூடாது என்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பேனர் வைக்கப்பட்டதை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் என்ற மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது/ இந்த பேனர் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பேனரில் இந்துக்கள் அல்லாதவர்கள், ரோகிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் கிராமத்திற்கு நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கிராமத்தில் எங்கேயாவது அவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரை அடுத்து போலீசார் அந்த பேனர்களை அகற்றினர். அப்போது கிராமத்தில் உள்ளவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பேனர் வைத்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva