வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (13:21 IST)

ஜூலை மாதம் வரை தேவையான தண்ணீர் உள்ளது: பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்

drinking water
பெங்களூர் நகரில் குடிதண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஜூலை மாதம் வரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தேவையான அளவு தண்ணீர் இருப்பதாக பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். 
 
பெங்களூரில் விடிய விடிய தண்ணீருக்காக பொதுமக்கள் காத்திருப்பதாக புறப்படும் நிலையில் தனியார் தண்ணீர் லாரி நிறுவனங்கள் இதை வைத்து விலையை ஏற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியத்தின்  தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியபோது, ஜூலை மாதம் வரை நகரில் விநியோகிக்க போதுமான தண்ணீர் உள்ளது. பெங்களூரு முழுவதும் தினமும் 1,470 மில்லியன் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை. 
 
மேலும் வரும் மே 15-ம் தேதி காவிரி ஐந்தாம் கட்டத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதால் அதன் பிறகு பெங்களூருவுக்கு கூடுதலாக 775 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். நகரின் தற்போதைய தண்ணீர் தேவை 2,100 மில்லியன் லிட்டர் ஆக உள்ளது. அணைகளில் தற்போது 34 டிஎம்சி தண்ணீர் உள்ளது” என தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva