1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 22 அக்டோபர் 2022 (11:28 IST)

மாநில அரசுகள் சார்பில் தொலைகாட்சி ஒளிபரப்ப மத்திய அரசு தடை: கல்வி தொலைக்காட்சி என்ன ஆகும்?

kalvi
மாநில அரசுகள் சார்பில் தொலைகாட்சி ஒளிபரப்ப மத்திய அரசு தடை: கல்வி தொலைக்காட்சி என்ன ஆகும்?
மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சிகள் நடத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதால் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சி உள்பட ஒரு சில தொலைக்காட்சிகளில் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பு வினியோகம் செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை மாநில அரசுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே மாநில அரசுகள் ஒளிபரப்பு வரும் சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இதன் காரணமாக தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran