திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (21:59 IST)

இரட்டை இலை ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் அதிமுக அதிர்ச்சி

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தவுடன் அதிமுக என்ற கட்சியின் பெயரும், இரட்டை இலை சின்னமும் ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கப்பட்டது. நடந்து முடிந்த ஆர்.கே. நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் அதிமுக வேட்பாளர் போட்டியிட்டார்
 
இந்த நிலையில் வரும் மே 12ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுகவின் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்த நிலையில்  அ.தி.மு.க.வின் மூன்று வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தார்.
 
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கமளித்தபோது, “வேட்புமனுதாக்கல் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே அ.தி.மு.க. சார்பில் கர்நாடகத்தில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த கட்சி சார்பில் எந்தவித கடிதமும் கொடுக்காததால் இரட்டை இலை சின்னத்தை மூன்று வேட்பாளர்களுக்கும் ஒதுக்க முடியாது” என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே மூன்று வேட்பாளர்களும் வேறு சின்னங்களில் தான் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.