1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (18:24 IST)

காங்கிரஸ் லாலி பாப் அரசியல்; பாஜக வளர்ச்சிக்கான அரசியல்: மோடி..

கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன் பின்னர் மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. 
 
இந்நிலையில், மோடி பிரச்சாரத்திற்கு செல்லும் முன்னர் அக்கட்சியின் வேட்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடியுள்ளார். அதில் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, 
 
சாதி அரசியல் செய்பவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி என்பது தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குவதுதான். 
 
கடந்த சில தேர்தல்களை கவனித்தால், சில அரசியல் கட்சிகள் மதம் சார்ந்து மக்களை பிளவுபடுத்துவதை பார்க்கலாம். தேர்தலின் போது சில சமூகத்தினரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடைகிறார்கள். 
ஆனால், நாம் மக்களின் முன்னேற்றத்திற்கான அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறோம். கர்நாடகாவில் நமக்கு மூன்று கொள்கைகள்தான் ஒன்று வளர்ச்சி, இரண்டு வேகமான வளர்ச்சி மற்றும் மூன்று ஒட்டுமொத்தமான வளர்ச்சி. 
 
பாஜக வளர்ச்சிக்கான அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேர்தல்களில் தோல்வியை சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சி தாராளமாக பொய்களை பரப்பியுள்ளது. 
 
காங்கிரஸ் கலாச்சாரத்தை அழித்தால் ஒழிய மாசற்ற அரசியலை நம்மால் உருவாக்க முடியாது. கர்நாடகத்தில் கூடிய விரைவில் தாமரை மலரும் என மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.