1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (16:36 IST)

அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி குறித்து முக்கிய அறிவிப்பு!

அரிசி, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யபப்டுவதாக அறிவிப்பு.

 
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமலுக்கு வந்தது முதலாக பல்வேறு பொருட்களுக்கும் குறிப்பிட்ட அளவிலான ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முதல் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிகிதம் உயர்த்தப்பட்டது.

பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, லேபிள் ஒட்டி விற்கப்படும் உலர்ந்த காய்கறிகள், பழங்கள், பன்னீர், தேன், கோதுமை, பிற தானியங்கள், மீன், இறைச்சி, தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி  வரி குறித்து தவறான தகவல் பரவிய நிலையில் அரிசி, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யபப்டுவதாக என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சில்லறையில் விற்கப்படும் அரசி உள்ளிட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

மேலும் பருப்பு, கம்பு, ஓட்ஸ், மக்காச்சோளம், மாவு, ரவா, பீசன், பஃப்டு ரைஸ், தயிர் உள்ளிட்ட சில பொருட்கள் முன் பேக் செய்யப்படாத அல்லது முன் லேபிளிடப்படாமல் விற்கப்படுவதற்கு ஜிஎஸ்டி இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர பேப்பர், ஷார்ப்னர், ஸ்கிம்மர், கரண்டி, எல்.இ.டி விளக்குகள், வரையும் கருவிகள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி 12%ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உலக வரைப்படங்கள், உலக உருண்டை, சுவர் வரைப்படங்கள், நிலபரப்பு படங்கள் உள்ளிட்டவற்றிற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி.

வங்கி காசோலைகளுக்கு 18% ஜிஎஸ்டியும், வாட்டர் ஹீட்டர்களுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஐசியு தவிர ரூ.5 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்கும் சிகிச்சை அறைகளுக்கு 5 சதவீதமும், மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு வசதிகளுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கபட்டுள்ளது. ரூ.1000க்கு மேல் உள்ள ஓட்டல் வாடகை அறைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.