1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது: பாஜக அதிரடி அறிவிப்பு!

bjp
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என பாஜக அதிரடியாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த 2018 ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த தெலுங்கு தேசம் திடீரென விலகியது. இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தெலுங்கு தேச கட்சியுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறியபோது தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி என்பது கிடையாது என்றும் அதே போல் ஒரு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது பிரதமர் மோடிக்கு நல்ல மரியாதை இருந்தாலும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் 
 
தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சியுமே குடும்ப அரசியல் கட்சி என்றும் இரண்டுமே எங்களுக்கு ஒன்றுதான் என்றும் எனவே இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்