வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 மே 2023 (11:49 IST)

தேர்தலுக்கு பிறகு ஜேடிஎஸ் உடன் கூட்டணி இல்லை: கர்நாடக காங்கிரஸ் அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என கர்நாடக மாநில காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
கர்நாடக மாநில தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு முக்கிய கட்சிகள் நேருக்கு நேர் எதிர்த்து போட்டியிடுகின்றன. 
இந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வெளிவந்தாலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்நிலையில் கர்நாடகா மாநிலத் தேர்தலில் ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க மாட்டோம் என கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். 
 
மேலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran