செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (08:29 IST)

பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதிஷ்குமார் ஆட்சி தப்புமா?

பீகாரில் பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சர் பதவியை ஏற்ற நிதீஷ் குமார் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை கோர இருக்கும் நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அவர் முதல்வராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சமீபத்தில் திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஒன்பதாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதலமைச்சர் ஆகவும் பதவியேற்றனர்.

இந்த நிலையில் இன்று பீகார் சட்டப்பேரவையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருக்கும் நிலையில் அவரது ஆட்சி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்கள், ஜனதா தளத்திற்கு 45 எம்எல்ஏக்கள்  மற்றும் ஒரு சுயேச்சை உள்பட 5 எம்எல்ஏக்கள் ஆதரவு நிதீஷ் குமார் இருப்பதால் அவருக்கு மொத்தம் 128 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது

 நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்து பாஜக எம்எல்ஏக்கள் பாட்னா அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் மூன்று எம்எல்ஏக்கள் திடீரென ஹோட்டலுக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.  இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக கூட்டணிக்கு எதுவும் பிரச்சனை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva