வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (07:17 IST)

இந்தியா கூட்டணிக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டார் நிதிஷ்குமார்: காங்கிரஸ்

இந்தியா கூட்டணிக்கு நிதிஷ்குமார் இறுதி சடங்கு செய்து விட்டார் என காங்கிரஸ் கட்சியின் பிரபலம் ஆச்சார்யா பிரமோத் என்பவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியா கூட்டணி என்ற அமைப்பை தொடங்குவதற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர் நிதீஷ் குமார். ஆனால் இன்று அவரே அந்த கூட்டணியில் இருந்து விலகியது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பிரபலமான ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் பேட்டியளித்த போது இந்தியா கூட்டணி என்ற ஒரு கூட்டணி தற்போது இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்

இந்தியா கூட்டணியை உருவாக்கிய போது சில நோய்களால் பாதிக்கப்பட்டது, அது பின்னர் ஐசியு மற்றும் வென்டிலேட்டர் வரை சென்று, தற்போது நிதிஷ்குமார் அதற்கு இறுதி சடங்கை செய்துவிட்டார், இனி அந்த கூட்டணி இருப்பதாக நான் கருதவில்லை என்று கூறினார்.

பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை சுப்பிரமணியசாமி விமர்சனம் செய்தது போல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே காங்கிரஸ் கட்சியை ஆச்சார்யா விமர்சனம் செய்வதாக கருத்துக்கள் வெளியாகின்றன

Edited by Siva