வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (19:30 IST)

“நோ தமிழ்நாடு, இனி ஒன்லி கைலாஷா”.. நித்தியின் அதிரடி முடிவு

”இனி என் நாடு கைலாஷா தான், இனி எனக்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் வழக்கு ஆகிய வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா, வெளிநாட்டிற்கு தப்பியோடியதை தொடர்ந்து, போலீஸாரால் வலை வீசி தேடப்பட்டு வருகிறார்.

எனினும் அவர் ’கைலாஷா” என்று பெயரிடப்பட்ட ஒரு தீவை விலைக்கு அங்கேயே ஒரு தனி நாட்டை உருவாக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. நித்தியானந்தா இணையத்தில் பல வீடியோக்களும் வெளியிட்டுக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோவில் பேசிய நித்தியானந்தா, “கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இனி, எனக்கும் தமிழகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை, என் வாழ்நாள் முழுவதும் நான் தமிழில் பேசுவேனே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை” என கூறியுள்ளார்.

மேலும் “நான் இறந்த பிறகு கர்நாடக ஆசிரமத்தில் உள்ள தியான பீடத்தில் தான் என் உடல் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதி வைத்துள்ளேன். சொத்து முழுவதும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை நகரங்களில் உள்ள குரு பரம்பரைக்கு எழுதி வைத்து விட்டேன்” எனவும் கூறியுள்ளார்.