1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (13:15 IST)

உலகின் மிகப்பெரிய மைதானத்தில் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சி..

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெறும் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மொரோடாவில் முன்னதாக கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் 1,10,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் அதிநவீன மின்விளக்குகள், பிரம்மாண்ட பார்க்கிங் வசதி ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்து வந்துள்ளது.

தற்போது அம்மைதானத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது மொரோடா மைதானம். இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெறும் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் வருகை தந்துள்ளார். இதற்காக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.