வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (15:33 IST)

சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படம் கேட்டு வற்புறுத்தல் – நித்யானந்தா மீது அடுத்த புகார் !

நித்யானந்தா தனது இரு மகள்களைக் கடத்தி வைத்திருப்பதாக புகார் கொடுத்த தொழிலதிபர் ஜனார்த்தன சர்மா மேலும் ஒரு புகாரைத் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா தனது இரு மகள்களைக் கடத்தி வைத்துக்கொண்டு தன்னிடம் ஒப்படைக்காமல் இருப்பதாக பெங்களூவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜனார்த்தன சர்மா என்பவர் புகாரளித்தார். இதை ஏற்று நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் அனுப்ப அவர் இந்தியாவை விட்டு அவர் தப்பித்து சென்றுவிட்டதாக போலிசாரால் சொல்லப்பட்டது.

இது சம்மந்தமாக நடக்கும் வழக்கில் நேற்று ஜனார்த்தனன் சர்மா நேற்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ‘நித்யானந்தா ஒரு வாட்ஸ் அப் குழுவை நடத்தி வந்தார். அதில் தனது இரு மகள்கள் உட்பட 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவில் உள்ளவர்கள் தங்களது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள நித்யானந்தாவால் வற்புறுத்தப்பட்டனர்’ எனத் தெரிவித்து அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.