வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (08:32 IST)

மகளை பாலியல் பலாத்காரம் செய்து எயிட்ஸ் நோயைப் பரப்பிய கொடூர தந்தை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தஞ்சாவூர் மதுக்கூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற நபர் தனது மகளை வல்லுறவு செய்து எய்ட்ஸ் நோயாளியாக்கிய தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். மனைவியை இழந்த இவர் தனது மகளோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுமியின் நடவடிக்கைகளி மாற்றம் தெரியவே அவரை ஆசிரியர்கள் விசாரிக்க அப்போது அவர் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை சொல்லியுள்ளார்.

தனது தந்தை தன்னை ஓராண்டாக வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதை வெளியே சொன்னால் தன்னைக் கொன்றுவிடுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் சொல்ல அவர்கள் உடனெ சிறுமியின் தந்தை குமாரைக் கைது செய்தனர்.

காப்பகத்தில் பாதுகாக்கப்பட்ட சிறுமிக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு ஹெச் எய் வி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது தந்தைக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கும் எய்ட்ஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது சம்மந்தமான வழக்கில் குற்றவாளியான தந்தைக்கு 4 ஆயுள் தண்டனையும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்துள்ளது நீதிமன்றம்.