செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (10:23 IST)

நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தரைமட்டம் ....அதிகாரிகள் தகவல் !

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாநிலத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் நேற்று இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் நகரின் ஹதிஜன் என்ற பகுதியில் நித்யானந்தா நடத்தி வந்த  ஆசிரமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் நித்யானந்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு  செய்துள்ளனர். 
 
இந்த நிலையில் நித்யானந்தா, நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. இதை மத்திய அமைச்சகம் மறுத்து வந்த நிலையில், நேற்று, மத்திய அரசு, வெளிநாட்டில் இருக்கும் நித்யானந்தாவை பிடித்து வர உள்ளதாகவும் அறிவித்தது.
 
இந்நிலையில், குஜராத்தில் சர்ச்சைக்குரிய பள்ளி நடத்திவரும் அறக்கட்டளையிடம் இருந்து சட்ட விரோதமாக குத்தைகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் வந்துள்ளது.
 
அதனடிப்படையில், ஆணைய அதிகாரிகள் நித்யானந்தாவின் ஆசிரமத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினர்.