போலீஸ் சரக்கடிச்சா விசாரணையின்றி டிஸ்மிஸ்தான்! – பீகார் முதல்வர் அதிரடி உத்தரவு!
பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் மது அருந்தும் போலீஸாரை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பீகாரில் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்து வரும் நிதிஷ்குமார் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு முதல் பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது.
மேலும் இதை மீறி வீடுகளில் மதுப்பாட்டில்களை மறைத்து வைத்தால் மொத்த குடும்பத்திற்கும் சிறை தண்டனை போன்ற சட்டங்களும் அமலில் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் காவலர்கள் இடையே பேசிய முதல்வர் நிதிஷ்குமார் “காவலர்கள் மக்களுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும். பூரண மதுவிலக்கை செயல்படுத்த வேண்டிய காவல்துறையினரே மது அருந்துதல் கூடாது. காவல்துறையினர் யாராவது மது அருந்தினால் எந்த அதிகாரத்தில் உள்ளவராக இருந்தாலும் டிஸ்மிஸ் செய்யப்படுவார்” என தெரிவித்துள்ளார்.