திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:50 IST)

படகுகள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக வேண்டும்: அமித்ஷாவிடம் வேண்டுகோள் வைத்த நிர்மலா சீதாராமன்..!

Amitshah
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் தேவை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தேன் என்றும் அவரும் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளார் என்றும் அதற்கு தனது நன்றி என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.  

உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து தென் தமிழகத்தின் வெள்ள வெள்ள நிவாரணம் குறித்து பேசி வார்த்தை நடத்தினேன் என்றும் படகுகள் ஹெலிகாப்டர் மற்றும் பல்வேறு உதவிகள் உடனடியாக தேவை என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்தேன் என்றும் எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக அவர் படகுகள், ஹெலிகாப்டர்கள் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் அவருக்கு எனது நன்றி என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  இன்று பிற்பகல் 12 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva