வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:16 IST)

நெல்லை, தூத்துக்குடி உட்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நான்கு மாவட்ட மக்கள் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளனர் என்றும் இதனை அடுத்து மீட்பு படையினர் பொதுமக்களை காப்பாற்றி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

கிட்டத்தட்ட 10 அமைச்சர்கள் தென் மாவட்டத்தில் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் மழை ஓய்ந்த பாடு இல்லை என்பதை குறிப்பிடும் வகையில் இன்றும் 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Edited by Siva