கொரோனா பரவல் எதிரொலி… அடுத்த இந்த மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு!

Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:42 IST)

உத்தர பிரதேசத்தின் சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பூசி வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகரிக்கும் மாநிலங்கள் பல பகுதி நேர, முழு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.

ஏற்கனவே மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியில் கொரோனா அதிகரிப்பால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்
இப்போது உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோ உள்ளிட்ட மூன்று நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :