திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (04:50 IST)

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு! இனி எம்.ஆர்.பி விலை அவசியம்

ஆன்லைன் மூலம் வர்த்தம் செய்யும் நிறுவனங்களுக்கு நேற்று முதல் எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச சில்லறை விலை உள்பட ஒருசில முக்கிய விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை இனி கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இணையதளங்கள் மூலம் பொருட்களை வாங்கும் நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய விதிகள் புத்தாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் முக்கியமாக ஒரு பொருளின் எம்.ஆர்.பி எனப்படும் அதிகபட்ச விற்பனை விலை, காலாவதி நாள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விவரங்கள் ஆகியவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை இந்த விதிமுறைகளை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய விதிமுறைகள் ஏற்கனவே ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது ஆறுமாத அவகாசத்திற்கு பின்னர் நேற்று முதல் இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.