வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (14:03 IST)

சிறுவர், சிறுமியருக்கான புதிய ஓய்வூதிய திட்டம்.! பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..!!

Central Budjet
18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மக்களவையில் இன்று செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தை தவிர பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'என்.பி.எஸ். வாத்சல்யா' (NPS Vatshalya) என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் தங்களது பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர் அல்லது அவர்களின் பாதுகாப்பாளர்கள் அவர்களின் கணக்கில் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும். 

 
இத்திட்டத்தில் சேர்க்கப்படும் சிறார்கள், 18 வயதை அடைந்ததும் 'என்.பி.எஸ். வாத்சல்யா' திட்டத்தின் கீழ் இருக்கும் அவர்களது ஓய்வூதிய கணக்கை தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான ஓய்வூதிய கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம்  என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.