ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (13:06 IST)

கிசான் கிரெடிட் கார்டு திட்டம் என்றால் என்ன.? விவசாயிகளுக்கு சிறப்பு அறிவிப்பு..!

Budjet
கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 5 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 5 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தார்.
 
மிக மிக குறைந்த வட்டியில், விவசாயிகளுக்கு கடன் வழங்கக்கூடிய திட்டம் இதுவாகும். விவசாயம் தொடர்பான பணிகளுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது. கடன் கொடுக்கப்பட்ட பயிரின் அறுவடை காலத்தை பொறுத்து, இந்த கடனை திருப்பி செலுத்தும் காலம் நீட்டிக்கப்படுவது இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சம்.
 
இந்த திட்டத்தின் மூலம், விவசாயம், மீன்வளம், கால்நடை வளர்ப்பிற்கான கடன் தேவைகளை விவசாயிகளுக்கு குறுகிய கால கடன்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம். ஒரு விவசாயி 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். கிசான் கிரெடிட் கார்டின் கீழ் ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் 7 சதவீத வட்டியில் கிடைக்கிறது. இதில் 3 சதவீத மானியமும் அடங்கும்.

அதாவது கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் 4 சதவீத வட்டியில் கடன் பெறுகிறார்கள்.  இந்த கிசான் கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் கடன் வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சமீபகாலமாகவே மத்திய அரசுக்கு விவசாயிகள் விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.


மத்திய அரசு அறிவித்துள்ள கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.